/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொப்பரை தேங்காய் ரூ. 135க்கு விற்பனை
/
கொப்பரை தேங்காய் ரூ. 135க்கு விற்பனை
ADDED : பிப் 21, 2025 12:55 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வேடபாளையத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, உத்திரமேரூர், சாலவாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட 73 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ், கொப்பரை தேங்காய் கிலோ 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்., முதல் செப்., வரை கிலோ 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, கொப்பரை தேங்காய் கிலோ 100ஐ கடந்து விற்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், எள் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் யுவராஜ் கூறியதாவது:
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தற்போது கொப்பரை தேங்காய், எள் ஆகியவை விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு வரும் விளைப்பொருட்களை பாதுகப்பாக வைக்க, 1,500 கோணி பைகள் இருப்பு உள்ளன. மேலும், நெல், வேர்க்கடலை ஆகிய பொருட்களை சேமிக்கவும் போதிய குடோன் வசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.