/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்காச்சோளத்திற்கு கூடும் மவுசு
/
மக்காச்சோளத்திற்கு கூடும் மவுசு
ADDED : ஜூலை 16, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்காச்சோளம் என்பது உணவு, தீவனம், எரிபொருள் மற்றும் தொழில்துறை என நான்கு துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முழுமையான பொருளாதார பயிராக கருதப்படுகிறது.
'எத்தனால்' போன்ற எரிபொருள் உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பிற மாநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் காலம் காலமாக லாபம் பார்த்து வருகின்றனர். இப்போது தமிழக விவசாயிகளும் பரவலாக மக்காச்சோளம் பயிரிட்டு பலன் பெற்று வருகின்றனர். இங்கே அமோகமாக விளைந்த மக்காச் சோளத்தை மகிழ்ச்சியுடன் நேற்று உலர வைத்த விவசாயி. இடம்: கொள்ளக்குடி கிராமம், திருவண்ணாமலை.