/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு இடம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கவுன்சிலர் புகார்
/
அரசு இடம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கவுன்சிலர் புகார்
அரசு இடம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கவுன்சிலர் புகார்
அரசு இடம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கவுன்சிலர் புகார்
ADDED : மார் 15, 2025 06:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், 46வது வார்டில், மாநகராட்சிக்குட்பட்ட இடத்தை ஆக்கிரமித்து தனி நபர் ஆதிக்கம் செய்வதாக, வார்டு கவுன்சிலர் கயல்விழி, காஞ்சிபுரம் தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம், ஓரிக்கையில் உள்ள 46வது வார்டில், அரசு புறம்போக்கு கால்வாய் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி கட்டியுள்ளார்.
கடை கட்டவும் அங்கு முயற்சி செய்கிறார். ஏற்கனவே உள்ள அவரது கடையும் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளது.
மாநகராட்சிக்கு வரியும் செலுத்தாமல், ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டு, மாநகராட்சிக்கு கட்டடம் கட்ட பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வேயர் வாயிலாக இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.