/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்மாற்றி அமைக்க கோரி மாநகராட்சி கவுன்சிலர் மனு
/
மின்மாற்றி அமைக்க கோரி மாநகராட்சி கவுன்சிலர் மனு
ADDED : செப் 19, 2024 07:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் வடக்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் புனிதா சம்பத் அளித்த கோரிக்கை மனு விபரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, கடந்த ஜன., மாதம், 10ம் தேதி நடந்த கூட்டத்தில் மனு அளித்தும் இதுநாள் வரை மின்மாற்றி அமைக்கவில்லை. மாகாளியம்மன் கோவில் தெருவில் பூர்வாங்க பணிகள் செய்தும் மின்மாற்றி அமைக்கவில்லை.
மேலும், லாலா குட்டை தெருவில் மின்மாற்றி அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதன் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் லாலா குட்டை தெருவில் புதிய மின்மாற்றி அமைப்பதோடு, பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். வரதராஜபுரம் தெருவில் கால்வாய் அருகில் உள்ள இரும்பு கம்பத்தை மாற்ற வேண்டும். மாகாளியம்மன் கோவில் தெருவில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.