/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
/
மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 18, 2025 12:16 AM
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் குளோரி எப்சிபா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மலர்க்கொடி வரவேற்றார். முன்னாள் பள்ளி மாணவர் உதயகுமார் நுாற்றாண்டு தீபச்சுடர் ஏற்றினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுவின் தலைவர் சாந்தி சீனிவாசன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் டி.சுந்தர்கணேஷ், மாநகராட்சி தி.மு.க., -- கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் பல்வேறு போட்டிகள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இடைநிலை ஆசிரியை வெற்றிசெல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.