/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி
UPDATED : அக் 06, 2025 12:55 AM
ADDED : அக் 06, 2025 12:53 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அமுதுபடி தெருவில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலையை உடைத்து குழாய் பதிக்கும் பணிக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
![]() |
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக குடிநீர் குழாய் இணைப்புக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், சாலையோரம் ஆக்கிரமிப்புகள் இருந்ததால், அவை அகற்றப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி, 30வது வார்டு அமுதுபடி தெருவில், சாலையோரம் குழாய் பதித்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதற்காக, சாலையோரம் பள்ளம் தோண்டாமல், 'கான்கிரீட்' சாலையை உடைத்து பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், சேதமான சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைத்தாலும், சமன் இல்லாத சாலையாக இருக்கும். இதனால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், அமுதுபடி தெருவில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பள்ளம் தோண்டி குழாய் பதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் அமுதுபடி தெருவில், பிரதான குழாய் பதிப்பதற்காக சாலையை உடைத்து பள்ளம் தோண்டி வருகிறோம். வீட்டு இணைப்பிற்கான குழாய் பதிக்கும்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்படும்' என்றார்.