ADDED : டிச 04, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் கீழ்வெங்கடச்சாரி தெருவை சேர்ந்தவர் வசந்தா, 45. இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று அருகிலுள்ள நிலத்தில்,நேற்று முன்தினம் காலை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில், அறுந்து கிடந்த மின் கம்பியை பசு மிதித்தத. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. தகவல் அறிந்த மின்வாரிய துறையினர், மின் இணைப்பை துண்டித்து மின் கம்பியை அகற்றினர்.
உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.