/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மலையாங்குளத்தில் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை
/
மலையாங்குளத்தில் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை
மலையாங்குளத்தில் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை
மலையாங்குளத்தில் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை
ADDED : ஜூன் 27, 2025 12:00 AM

காஞ்சிபுரம்:சுடுகாட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாட்டு கொட்டகையை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் பொது சுடுகாடு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டை முறையாக பராமரிக்காமல் வைத்துள்ளது.
இதனால், அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர், தன்னுடைய மாடுகளை கட்ட கொட்டகை அமைத்து பயன்படுத்தி வருகிறார். மேலும், மாட்டின் கழிவுகளை அங்கேயே குவியலாக குவித்து வைத்துள்ளார்.
இது குறித்து, கிராம மக்கள் காஞ்சிபுரம் கலெக்டரிடம் இரு மாதங்களுக்கு முன் மனு அளித்தனர். கலெக்டர் உத்திரமேரூர் தாசில்தாருக்கு சம்பந்தப்பட்ட மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மலையாங்குளம் சுடுகாட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கொட்டகையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.