/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் உறிஞ்சு குழியில் விழுந்த பசு தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு

ADDED : ஜூலை 30, 2025 12:27 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், மழைநீர் உறிஞ்சு குழியில் விழுந்து, சிக்கி தவித்த பசு மாட்டை, தீயணைப்பு மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
காஞ்சிபுரம் தாயார்குளம் எம்.ஜி.ஆர்., நகரில், கான்கிரீட் உறையால் அமைக்கப்பட்ட, 10 ஆடி ஆழமுள்ள திறந்தவெளி மழைநீர் உறிஞ்சு குழி உள்ளது. நேற்று காலை 11:30 மணியளவில், அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த பசு ஒன்று, உறிஞ்சு குழியில் தவறி விழுந்துவிட்டது.
குழியில் இருந்து வெளியேற முடியாமல் பசு கத்தியது. அக்கம் பக்கத்தினர் பசுவை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படை குழுவினர் தாயார் குளம் பகுதிக்கு சென்றனர். மழைநீர் உறிஞ்சு குழியில் விழுந்து வெளியேற முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் சிக்கி தவித்த பசுவை, அரை மணி நேரம் போராட்டத்திற்குபின் கயிறு வாயிலாக பசுவை உயிருடன் மீட்டனர்.