/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஈகா ஏரி மதகு படிக்கெட்டில் விரிசல் ஆரியபெரும்பாக்கம் விவசாயிகள் அச்சம்

ADDED : அக் 16, 2024 12:53 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில், ஈகா ஏரி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் நீரை பயன்படுத்தி, 150 ஏக்கர் நிலத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 2019- - 20ம் ஆண்டு, 25 லட்ச ரூபாய் செலவில், ஈகா ஏரி மதகு மற்றும் படிக்கெட் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அதே ஆண்டு, குடிமராமத்து திட்டத்தில், கரை பலப்படுத்தப்பட்டது.
ஈகா ஏரி முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரி மதகிற்கு செல்லும் படிக்கெட் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், செடி, கொடிகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
இதனால், மழைக்காலத்தில் ஏரி மதகு வழியாக தண்ணீர் கசியும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஈகா ஏரி மதகு படிக்கெட் விரிசலை சரி செய்ய வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.