/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்
/
அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்
அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்
அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்
ADDED : ஏப் 11, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு வழியாக செல்லும், மஞ்சள்நீர் கால்வாய்யோரம், மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் இரு இடங்களில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில், பள்ளி கட்டடம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.