தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிரேன் ரோப் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு

 கிரேன் ரோப் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு

 கிரேன் ரோப் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 04, 2026 09:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, தொழிற்சாலையில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், செட்டிபுண்ணியம் வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன், 55. இவர், ஒரகடம் அருகே, வட்டம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிட்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் தயாளன் வழக்கம் போல தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தொழிற்சாலையில் தயார் செய்த பாய்லர் டேங்கை கிரேன் மூலம் லாரில் ஏற்றும் போது, கிரேன் ரோப் அறுந்தது .

அப்போது, பாய்லர் டேங்க் தயாளன் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us