UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 11:48 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: வெறிநாய் கடி தடுப்பு குறித்து, மாணவ- – -மாணவியர் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி வையாவூரில் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த வெறி நாய் கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார்.
ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெறிநாய் கடி தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
