கிரைம் கார்னர்: திருத்தணி பஸ் நிலையத்தில் தொழிலாளி சடலமாக மீட்பு
கிரைம் கார்னர்: திருத்தணி பஸ் நிலையத்தில் தொழிலாளி சடலமாக மீட்பு
UPDATED : மே 12, 2026 08:26 PM
ADDED : மே 12, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில், 63 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், முதியவரின் உடலை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த முதியவர் பெயர் பாபு, மூட்டை துாக்கும் தொழிலாளி என தெரிந்தது. மேலும், பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக தங்கியிருந்தார் எனவும் தெரியவந்தது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
