/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சி.எஸ்.கே., யு - 15 கிரிக்கெட் எபினேசர் பள்ளி அபாரம்
/
சி.எஸ்.கே., யு - 15 கிரிக்கெட் எபினேசர் பள்ளி அபாரம்
சி.எஸ்.கே., யு - 15 கிரிக்கெட் எபினேசர் பள்ளி அபாரம்
சி.எஸ்.கே., யு - 15 கிரிக்கெட் எபினேசர் பள்ளி அபாரம்
ADDED : ஜன 14, 2025 12:29 AM

சென்னை, திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சி.எஸ்.கே., கிளப் இணைந்து, யு - 15 கிரிக்கெட் போட்டியை, ஆவடி ஓ.சி.எப்., மைதானம் மற்றும் பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடத்தி வருகின்றன.
போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த, 'குரூப் - ஐ' காலிறுதி லீக் சுற்றில், கொளத்துார் எபினேசர் பள்ளி மற்றும் அம்பத்துார் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த எபினேசர் அணி, 30 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 217 ரன்களை அடித்தது. அணியின் வீரர் ஆதவன், 68 பந்துகளில், 16 பவுண்டரியுடன் 107 ரன்களை அடித்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி, 28.4 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 95 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 122 ரன்கள் வித்தியாசத்தில், எபினேசர் பள்ளி வெற்றி பெற்றது.
'குரூப் - ஜெ' பிரிவில், முதலில் விளையாடிய, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அணி, 29.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 145 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் அஷ்வின், மூன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்து, 25 ரன்களை கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய எதிர் அணியான அலப்பாக்கம் வேலம்மாள், 30 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, போராடி 142 ரன்களை அடித்து, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நேற்று நடக்க இருந்த அனைத்து போட்டிகளும் மழையால் ஒத்திவைக்கப்பட்டன.