sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 தனியார் இ --- -சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தியும் சர்வர் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் சிரமம்

/

 தனியார் இ --- -சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தியும் சர்வர் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் சிரமம்

 தனியார் இ --- -சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தியும் சர்வர் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் சிரமம்

 தனியார் இ --- -சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தியும் சர்வர் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் சிரமம்


ADDED : மார் 02, 2026 05:03 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: தனியார் இ- - சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்தினாலும் சர்வர் பிரச்னைகளால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய கோட்டங்களில், 25க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் உள்ளன.

மின்சாரம் சப்ளை இந்த துணை மின் நிலையங்களில், குடியிருப்பு, வணிகம், விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் சிறு வணிக நிறுவன மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

மின் நுகர்வோர் தங்கள் பயன்படுத்தும் மின் அளவீட்டிற்கு ஏற்ப, இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய அலுவலகம் மற்றும் பொது சேவை மையமான இ - சேவை மையம் சென்று கட்டணம் செலுத்துகின்றனர்.

மின் வாரியத்தில் செலுத்து ம் கட்டணம் அன்றைய தினத்தில் வரவு வைக்கப்பட்டு, பில் வழங்கப்படுகிறது. தனியார் இ- - சேவை மையங்கள் என, அழைக்கப்படும் பொது சேவை மையங்களில், மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் நுகர்வோரிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சேவை மையத்தினர், அரசிற்கு பணம் செலுத்தாததால், மின் இணைப்பு துண்டிக்க வேண்டிய நி லை ஏற்படுகிறது.

இதுதவிர, ஊராட்சி நிர்வாகங்களின் மின் கட்டணம் மற்றும் புதிய கம்பங்களுக்கு முன்வைப்பு தொகை செலுத்தும் போது, பொது சேவை மையத்தினர் கையாடல் செய்வதாகவும் மற்றும் தாமதமாக செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், மின் வாடிக்கையாளர் மின் துண்டிப்பு, அபராதம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது .

இணைப்பு இதுகுறித்து, கோவிந்தவாடி மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வா டிக்கையாளர்களிடம் இருந்து, பொது சேவை மையத்தினர் பணத்தை வசூலித்து விடுகின்றனர். பணம் செலுத்திய ரசீது இருந்தாலும், எங்கள் கணக்கில் அப்டேட் ஆக மாட்டேங்கிறது. நாங்கள் ஒன்றும் செய்ய முடி யாது. இணைப்பு து ண்டிக்க வேண்டி ய சூழல் உள்ளது.

இ வ்வாறு அவர் கூறினார்.

பொது சேவை மைய ஊழியர்கள் கூறியதாவது:

ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, சர்வர் பிரச்னையால் பணம் திரும்ப வங்கி கணக்கிற்கு வந்து விடும். இதுபோன்ற நேரங்களில் மின் கட்டணம் செலுத்தாதது போல கணக்கு காட்டும். வேறு ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us