/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் சேதம்
/
நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் சேதம்
ADDED : நவ 10, 2024 12:48 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, காவனுார் புதுச்சேரி கிராமத்தில், 2022 - 23ம் நிதி ஆண்டில், 2 லட்சம் ரூபாய் செலவில், நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் அமைக்கப்பட்டது.
இங்கு நிழல் மற்றும் பழம் தரக்கூடிய வேம்பு, புங்கன், மா, கொய்யா, நாவல், அத்தி ஆகிய நாற்றுகள் வளர்க்கப்பட்டு, கிராமத்தின் பிரதான சாலையோரம், அரசு புறம்போக்கு நிலம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செடிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
நாற்றுகளை மழை மற்றும் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பசுமை வலை குடில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாற்றங்கால் பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது.
மேலும் பசுமை குடில் வலை கிழிந்து, கம்பிகள் எலும்புக்கூடுபோல காட்சியளிக்கிறது. எனவே நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடிலை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.