/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரியன் கேட் சாலை நடுவே இரும்பிலான தடுப்பு சேதம்
/
கரியன் கேட் சாலை நடுவே இரும்பிலான தடுப்பு சேதம்
ADDED : செப் 08, 2025 12:46 AM

காஞ்சிபுரம்:கரியன்கேட் சாலை நடுவே போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. இது, வாகன விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தாக உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கரி யன்கேட் ரயில் கடவுப்பாதை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி ஆகிய மார்க்கமாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெ ரும்புதுார், பூந்தமல்லி, சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அர சு மற்றும் தனியார் பே ருந்துகள் செல்கின்றன.
திருப்பதி, திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து வெள்ளைகேட் வழியாக காஞ்சிபுரத்திற்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இரு மார்க்கங்களில் செல்லும் வாகனங்கள், கரியன்கேட் பகுதியை கடந்து செல்கின்றன. ரயில்வே கேட் திறந்த பின் அதிவேகமாக முந்தி செல்லும் வாகனங்களால், கரியன்கேட் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை நடுவே இரும்பு தடுப்பு ஜூலை மா தம் அமைத்தனர்.
க ரியன்கேட் பகுதியில், வாகனங்கள் குறுக்கே புகுந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு வந்தன. இந்த சாலை நடுவே போடப்பட்டிருந்த தடுப்பு, இரு தினங்களுக்கு முன் அடையாள எண் தெரியாத வாகனம் மோதி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எ னவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்ற னர்.