/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த கம்பம் மின் விபத்து அபாயம்
/
சேதமடைந்த கம்பம் மின் விபத்து அபாயம்
ADDED : டிச 17, 2024 11:11 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாதில் பேரூராட்சியில், 10வது வார்டில் போஜகாரத் தெருவில், ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களின் வாயிலாக, 15 கே.வி., மின் வழித்தடம் செல்கிறது.
இங்குள்ள சில மின்கம்பங்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. குறிப்பாக, போஜகார தெரு ஆலடி பிள்ளையார் கோவில் அருகே இருக்கும் மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு பலத்த காற்று அடித்தால், மின் கம்பம் அடியுடன் முறிந்து, விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதை சம்மந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் நகரப்பிரிவு உதவி செயற்பொறியாளர் கூறுகையில், 'போஜகார தெருவில், 15 கே.வி., மின் வழித்தடம் செல்வதால், மின்தடை செய்யப்படும் நாட்களில் தான் சீரமைப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.