ADDED : அக் 16, 2024 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், மருத்துவம்பாடி கிராமம் உள்ளது.
இங்கு, பொட்டி பிள்ளையார் கோவில் அருகே, சாலையோரம் மின்கம்பத்தின் வழியாக, மின்வழித் தடம் செல்கிறது.
இந்த மின்வழித் தடத்தை தாங்கி பிடிக்கும் மின்கம்பம், நுனி பகுதி சேதமடைந்து உள்ளது.
வடகிழக்கு பருவ மழை துவங்கும் நேரத்தில், பலமாக காற்று அடித்தால் மின்கம்பம் முறிவு ஏற்பட்டு, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.