/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
/
சேதமான சாலையால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ADDED : மே 30, 2025 12:54 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் --- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, திருமுக்கூடல் சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குவாரி மற்றும் கிரஷர்களில் இயக்கப்படும் லாரிகளும் இந்த சாலையில் செல்கின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால், நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இங்கு, இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையினால், சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் பள்ளத்தில் சிக்கி நிலைத்தடுமாறி, விழும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.