/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த செவிலிமேடு- புறவழிச்சாலை
/
சேதமடைந்த செவிலிமேடு- புறவழிச்சாலை
ADDED : பிப் 16, 2024 10:22 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வந்தவாசி, உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலை செல்ல ஏதுவாக, செவிலிமேடு - கீழம்பி வரை, 8 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலை அடிக்கடி பழுதாவதால், அவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள், கார், டூ - வீலர் என அனைத்து வாகனங்களும் சிரமப்படுகின்றன.
வேகவதி ஆற்றுப்பாலம் அருகில், இச்சாலை மோசமான நிலையில் காணப்படுகின்றன. புறவழிச்சாலை அமைந்துள்ள, 8 கி.மீ., முழுதும் பெரிய அளவிலான பள்ளங்களுடன் காட்சியளிக்கின்றன.
சமீபத்தில் கூட கல்லுாரிமாணவ - மாணவியர் இருவர் இச்சாலையில் பலியாகினர். மேலும் விபத்துகள் அதிகரிக்காத வகையில், உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'செவிலிமேடு சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் டெண்டர் பிரிக்கப்பட்டு, 15 நாட்களில் சீரமைப்பு பணிகள் துவங்கிவிடும்' என்றார்.