/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிப்காட் சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளால் அபாயம்
/
சிப்காட் சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளால் அபாயம்
சிப்காட் சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளால் அபாயம்
சிப்காட் சாலையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளால் அபாயம்
ADDED : ஜூன் 18, 2025 01:37 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் சாலை பிரித்து செல்கிறது. ஸ்ரீபெரும்புதுார், வல்லம் -வடகால் தொழில் பூங்காகளில் உள்ள ஏராளமான தொழிசாலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் பல்வேறு வாகனங்களில் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரம் ஏராளமான சீமை கருவேல செடிகள் வளர்ந்துள்ளன. இவை பாதி சாலையில் படர்ந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் போது, சாலையோரம் உள்ள சீமை கருவேல முட் செடிகளில் உரசி காயமடைங்கின்றனர்.
எனவே, சிப்காட் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.