/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தகரம் ஏரிகரை சாலையில் தடுப்பில்லாமல் விபத்து அபாயம்
/
புத்தகரம் ஏரிகரை சாலையில் தடுப்பில்லாமல் விபத்து அபாயம்
புத்தகரம் ஏரிகரை சாலையில் தடுப்பில்லாமல் விபத்து அபாயம்
புத்தகரம் ஏரிகரை சாலையில் தடுப்பில்லாமல் விபத்து அபாயம்
ADDED : மே 24, 2025 10:54 PM
காஞ்சிபுரம்:ஏனாத்துார்-மருதம் கிராமம் வழியாக தென்னேரி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த கூட்டு சாலை, புத்தகரம் கிராமம் வழியாக செல்கிறது.
இந்த சாலையில், மரண பள்ளங்கள் உருவாகி குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து, முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டது.
குறிப்பாக, புத்தகரம் ஏரிக்கரை முதல் ஏனாத்துார்-மருதம் சாலை வரையில் ஏற்கனவே இருந்த தார் சாலையை அகற்றி விட்டு, புதிய தார் சாலை போடப்பட்டது. இருப்பினும், புத்தகரம் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மதகு அருகே சாலை ஓரம் தடுப்பு ஏற்படுத்தவில்லை. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
புத்தகரம் ஏரிக்கரை சாலை ஓரத்தில் மின் விளக்கு வசதியும் இல்லை. ஏரிக்கரை மதகிற்கு தடுப்பு இல்லாததால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மதகு தடுப்பு ஓட்டைக்கும் சாலை குறுக்கே போடப்பட்ட கால்வாய்க்கும் நடுவே சிக்குகின்றனர்.
எனவே, புத்தகரம் ஏரிக்கரை சாலை ஓரம், மதகு அருகே தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.