/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு, எச்சரிக்கை பதாகையின்றி ஆபத்தான சாலை வளைவு
/
தடுப்பு, எச்சரிக்கை பதாகையின்றி ஆபத்தான சாலை வளைவு
தடுப்பு, எச்சரிக்கை பதாகையின்றி ஆபத்தான சாலை வளைவு
தடுப்பு, எச்சரிக்கை பதாகையின்றி ஆபத்தான சாலை வளைவு
ADDED : நவ 12, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்திலிருந்து, தோட்டநாவல் கிராமம் வரை 3 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் இரண்டு இடங்களில் ஆபத்தான வளைவு உள்ளது. ஆபத்தான வளைவுகளில், சாலையோர இரும்பு தடுப்புகள் மற்றும் போக்குவரத்து எச்சரிக்கை பதாகை இல்லாமல் உள்ளது.
மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மருதம்- கிராமத்திலிருந்து, தோட்டநாவல் சாலை வளைவில், இரும்பு தடுப்பு, போக்குவரத்து குறியீடு பதாகை அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.