/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இலவச மருத்துவ முகாம் 262 பேருக்கு பரிசோதனை
/
இலவச மருத்துவ முகாம் 262 பேருக்கு பரிசோதனை
UPDATED : ஏப் 08, 2025 05:55 AM
ADDED : ஏப் 08, 2025 12:50 AM
காஞ்சிபுரம், இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில், இலவச மருத்துவ முகாம், அய்யன்பேட்டை சாய்ராம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமை வகித்தார். செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இதில், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி உள்ளிட்ட நோய்களுக்கு முகாமில் பங்கேற்ற, 262 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.
மகளிர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சங்க துணை தலைவர் டாக்டர் நிஷாப்ரியா சிகிச்சை அளித்தார். குழந்தைகளுக்கு, டாக்டர் ஞானவேல் சிகிச்சை அளித்தார்.
இம்முகாமில் அரசு சார்பில், பரந்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராகுல், சுகாதார ஆய்வாளர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.