தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பட்டுப்போன மரம் அகற்றம்

 பட்டுப்போன மரம் அகற்றம்

 பட்டுப்போன மரம் அகற்றம்


ADDED : நவ 30, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, மருத்துவன்பாடியில் சாலையோரத்தில் பட்டுப்போய் காய்ந்து இருந்த மரம் அகற்றப்பட்டது.

உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி கிராமத்தில், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி திருப்புலிவனம், வெங்கச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், இச்சாலையை ஒட்டி இருபுறமும் பசுமை சூழலை ஏற்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், பல வகையான மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.

அதில், பெரும்பாலானமரங்கள் ஆயுட்காலத்தை தாண்டிய நிலையில் உள்ளன. குறிப்பாக, மருத்துவன்பாடியில் சாலையோரத்தில் உள்ள மாமரம் ஒன்று, பட்டுப்போய் காய்ந்த நிலையில் இருந்தது.

இந்த மரத்தின் கிளைகள் அவ்வப்போது உடைந்து, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து வந்தன. எனவே, சாலையோரத்தில் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினரு க்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மருத்துவன்பாடியில் சாலையோரத்தில் பட்டுப்போய் காய்ந்து இருந்த மரத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us