/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரண்டு பேரூராட்சிகளில் குப்பை வாகனங்கள் வாங்க முடிவு
/
இரண்டு பேரூராட்சிகளில் குப்பை வாகனங்கள் வாங்க முடிவு
இரண்டு பேரூராட்சிகளில் குப்பை வாகனங்கள் வாங்க முடிவு
இரண்டு பேரூராட்சிகளில் குப்பை வாகனங்கள் வாங்க முடிவு
ADDED : பிப் 13, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களில், குப்பை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என, பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், 15வது நிதிக்குழு மானிய நிதியில், உத்திரமேரூர் பேரூராட்சியில், குப்பை அகற்ற, 23 லட்சம் ரூபாயில் டிப்பர் லாரியும், வாலாஜாபாத் பேரூராட்சியில், குப்பை அகற்ற, 8 லட்சம் ரூபாயில் மினி சரக்கு வாகனமும் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இரு வாகனங்களையும் கொள்முதல் செய்யும் பணியில், பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.