/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
வாலாஜாபாத் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 08, 2024 11:59 PM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் பயணம் மேற்கொள்ளவும், வணிக வளாகங்களில் விற்கும் பூ, பழம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி சார்பிலும், மகளிர் திட்டம் சார்பிலும், அப்பகுதி பேருந்து நிலையம் அருகே கட்டடங்கள் ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள், கடைகளின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் கூடுதலாக கட்டடங்கள் ஏற்படுத்தி ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது குறிப்பாக மாநகர பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதில் சிக்கல் உள்ளது.
மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இட நெருக்கடியில் அவதிப்படுவதாக புலம்புகின்றனர்.
எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.