/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
/
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2024 12:57 AM
காஞ்சிபுரம்:ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழாவில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் சமீபத்தில் பங்கேற்றார்.
இந்த விவகாரம் தமிழகத்தில், விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில அரசை கண்டித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம், கண்டன ஆர்ப்பாட்டம், மார்ச் 9ல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் காந்திரோட்டில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சிஅமுதன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான வேலமுருகன், விவசாயிகள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.
அப்போது, ஆந்திர மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து, வேல்முருகன் பேசினார்.
அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் அம்மாநிலங்களில் கட்டிய அணைகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, முழக்கங்களை எழுப்பினர்.

