/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி அருகே அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளால் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : டிச 29, 2025 06:50 AM

காஞ்சிபுரம்: வேளியூர் பள்ளி அருகே மரம், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எட்டாம் வகுப்பு வரையில் படித்து வருகின்றனர்.
மாணவ - மாணவியரின் நலன் கருதி பள்ளிக்கு புதிய கட்டடம் மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி கட்டடம் அருகே, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கீழ் மழைநீர் கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். மேலும், ஆளுயரத்திற்கு மரங்கள், செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அடர்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றி மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.