/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பார்வேட்டை உற்சவம் காஞ்சி வரதர் புறப்பாடு
/
பார்வேட்டை உற்சவம் காஞ்சி வரதர் புறப்பாடு
ADDED : ஜன 12, 2025 07:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், லஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில், பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.
நடப்பாண்டிற்கான பார்வேட்டை உற்சவத்திற்கு, ஜன., 14ம் தேதி இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு செல்கிறார்.
ஜன., 15 மறுநாள் அதிகாலையில், புளியம்பாக்கம், சங்காபுரம் ஆகிய பகுதிகளில், மண்டகப்படி உற்சவம் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, காலை பழையசீவரம் கிராமத்தில் எழுந்தருளி, மண்டகப்படி உற்சவம் நடைபெற உள்ளது.
மாலை 5:30 மணிக்கு, லஷ்மி நரசிம்மர் கோவில் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், பார்வேட்டை உற்சவம் நடைபெற உள்ளது.