/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
/
பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
ADDED : செப் 23, 2024 05:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ -- -மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டடம், அப்பகுதியில் உள்ள சின்னவேப்பங்குளக்கரையை சுற்றி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அமைந்துள்ளன.
இதனால், ஆய்வகம், சத்துணவு போன்ற அறைகளுக்கு செல்ல, சாலையை கடந்தும், குளத்தை சுற்றியும் மாணவர்கள் வர வேண்டியுள்ளது.
இதனால், இப்பள்ளிக்கு ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருக்காலிமேடு குறுக்கு கவரைத் தெருவில், ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 7.25 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன், 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம் மேலும், சமையல் அறை, ஆய்வகம், மாணவ- -- மாணவியருக்கு என, தனித்தனியாக கழிப்பறை வசதியுடன், புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணி, கடந்த ஜூன் மாதம் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய பள்ளி கட்டுமானப் பணியை அப்பகுதி வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணைமேயருமான குமரகுருநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.