/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துணை மேயர் வார்டில் பூங்கா திருக்காலிமேடில் வலியுறுத்தல்
/
துணை மேயர் வார்டில் பூங்கா திருக்காலிமேடில் வலியுறுத்தல்
துணை மேயர் வார்டில் பூங்கா திருக்காலிமேடில் வலியுறுத்தல்
துணை மேயர் வார்டில் பூங்கா திருக்காலிமேடில் வலியுறுத்தல்
ADDED : ஜன 16, 2025 07:20 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின், 21, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் பொழுது போக்கவும், திருக்காலிமேட்டில் பூங்கா இல்லை.
அதுமட்டுமின்றி, இளைஞர்கள் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், உடற்பயிற்சி கூடமும் இல்லை.
மேலும், பள்ளி மாணவ - மாணவியர் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானமும் இல்லாததால், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் விளையாடும் அவலநிலை உள்ளது.
அதனால், மாணவ- - மாணவியர் விளையாடுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும், 3 கி.மீ., துாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று வரவேண்டியுள்ளது.
இதனால், முதியோர், சிறுவர், சிறுமியர், இளம்பெண்கள், வாகன போக்குவரத்து நிறைந்த ரயில்வே சாலை வழியாக, மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று வருவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டு மற்றும் துணை மேயர் வார்டான, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில், அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு பூங்கா அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.