ADDED : செப் 05, 2024 11:17 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விச்சாந்தாங்கலில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். அங்கு பயிரிடப்பட்ட பல்வேறு செடிகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
களக்காட்டூரில் முதல்வர் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர்கள் பயிரிடப்பட்ட தோட்டங்களை பார்வையிட்டு அதன் பயன்கள் குறித்தும் கேட்டார்.
இதையடுத்து, களக்காட்டூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளை பார்வையிட்டார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தையும், குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
களக்காட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் அட்டை வழங்கல், வங்கி கணக்கு துவக்குதல், ஜாதி சான்று, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் முகாமையும் ஆய்வு செய்தார்.