/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமெரிக்காவில் உள்ள காஞ்சி சோமாஸ்கந்தர் சிலை விரைவாக மீட்டு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
/
அமெரிக்காவில் உள்ள காஞ்சி சோமாஸ்கந்தர் சிலை விரைவாக மீட்டு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
அமெரிக்காவில் உள்ள காஞ்சி சோமாஸ்கந்தர் சிலை விரைவாக மீட்டு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
அமெரிக்காவில் உள்ள காஞ்சி சோமாஸ்கந்தர் சிலை விரைவாக மீட்டு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை
ADDED : செப் 28, 2025 01:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் உலோக சிலையை, விரைவாக மீட்டு, காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சிலைகளை மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டறிந்தனர்.
சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் 'சான் பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில்' உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்.
இச்சிலை பற்றி கல்வெட்டு வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், இச்சிலையை, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடராமநாயனி என்பவர் கோவிலுக்கு பரிசாக வழங்கியதை உறுதி செய்துள்ளனர். இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இச்சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க வேண்டும் என, பல ஆண்டுகளாகவே காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்த துவங்கினர். விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டு அவரும் விசாரணை நடத்தினார்.
கோவிலிலும் கடந்தாண்டு சிலை கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதுவரை சிலை மீட்பது தொடர்பான நடவடிக்கை தீவிரமானதாக தெரியவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள சிலையை, விரைவாக மீட்டு காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.