/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் தகித்த தரை பக்தர்கள் ஓட்டம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் தகித்த தரை பக்தர்கள் ஓட்டம்
ADDED : ஜூலை 10, 2025 12:54 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வெளிபிரகார கருங்கல் தரை, வெயிலுக்கு சுட்டெரித்ததால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் ஓடினர். பிரகாரத்தில், மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வெளிபிரகாரத்தில் புதிதாக கருங்கல் தரை பதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
நேற்று அதிகபட்சமாக 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது பாரன்ஹீட் அளவில் 108 டிகிரியாகும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததால், கோவில் பிரகார தரை சுட்டெரித்தது. இதனால், பிரகாரத்தில் நடந்து செல்லும் முதியோர், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாமல், ஓட்டம் பிடித்தனர்.
எனவே, பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் வெளி பிரகார கருங்கல் தரையில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.