ஏகனாம்பேட்டை கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி
ஏகனாம்பேட்டை கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி
ADDED : செப் 08, 2026 04:41 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: ஏகனாம்பேட்டை ராணி அம்மன் கோவில் வளாகத்திலல், மழைநீர் தேங்குவதால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏகனாம்பேட்டையில், ராணி அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமின்றி, இந்த சாலை வழியாக பயணிப்பவர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
கோவில் வளாகம் மண் தரையாக இருப்பதால், லேசான மழைக்கே கோவில் வளாகத்தில் குட்டைபோல மழைநீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது.
கோவிலில் நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது.
எனவே, ராணி அம்மன் கோவில் வளாகத்தில், மழைநீர் தேங்காமல் இருக்க, கான்கிரீட் தரை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
