/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகன் கோவில் புனரமைப்பு பணி துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
/
முருகன் கோவில் புனரமைப்பு பணி துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
முருகன் கோவில் புனரமைப்பு பணி துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
முருகன் கோவில் புனரமைப்பு பணி துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2025 11:43 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில், பாலாலயம் நடந்து எட்டு மாதங்களாகியும், கிடப்பில் போடப்பட்டுள்ள கோவில் புனரமைப்பு பணியை துவக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் முருகன் கோவில் உள்ளது. கிருஷ்ணன், தெரு செங்குந்தர் சமுதாயத்தினர் பராமரிப்பில் உள்ள முருகன், ஹிந்து சமய அறநிலையத் துறையின், ஏகாம்பரநாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது.
பழமையான இக்கோவிலில், 1988ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து, 37 ஆண்டுகள் ஆனதாலும், கோவில் சுவரில் செடிகள் வளர்ந்து சிதிலமடைந்து வருவதாலும், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, செங்குந்தர் சமுதாயத்தினர், ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, உபயதாரர் நிதி 43.50 லட்சம் ரூபாய், கோவில் நிதி 43.50 லட்சம் ரூபாய், மொத்தம் 87 லட்சம் ரூபாய் மதிப்பில், இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த பிப்., 16ம் தேதி பாலாலயம் நடந்தது.
பாலாலயம் நடத்தப்பட்டு எட்டு மாதங்களாகியும், திருப்பணியை துவக்காமல், ஹிந்து சமய நிலையத் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், கோவில் சுவரில் செடிகள் வளர்ந்துள்ளதால், கோவில் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, பாலாலயம் நடந்து, எட்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முருகன் கோவில் திருப்பணியை துவக்கி, புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

