/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலகளந்தார் கோவிலில் மூடி கிடந்த சன்னிதிகள் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
/
உலகளந்தார் கோவிலில் மூடி கிடந்த சன்னிதிகள் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
உலகளந்தார் கோவிலில் மூடி கிடந்த சன்னிதிகள் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
உலகளந்தார் கோவிலில் மூடி கிடந்த சன்னிதிகள் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 20, 2025 12:53 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்கு உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் துாக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், இக்கோவிலில் உள்ள மூலவர் மற்றும் தாயார் சன்னதி மட்டுமே திறக்கப்பட்டு அர்ச்சகர்கள் இருந்தனர்.
பிற சன்னிதிகளான காரகத்து பெருமாள், கார்வாணப் பெருமாள், நீரகத்து பெருமாள் சன்னிதிகள் பூட்டியே இருந்தது. இதனால், நான்கு திவ்யதேச பெருமாளையும் தரிசித்து, அர்ச்சனை செய்து வழிபட பக்தர்கள் மூலவரையும், தாயாரையும் மட்டுமே தரிசனம் செய்துவிட்டு, பிற சன்னிதி மூலவரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வந்தால், நான்கு திவ்ய தேச பெருமாளையும் தரிசனம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் வருகிறோம். ஆனால், காரகத்து பெருமாள், கார்வாணப் பெருமாள், நீரகத்து பெருமாள் சன்னிதிகள் பூட்டியே இருந்தது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த சன்னிதிகளையும திறக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலையும் கூடுதலாக கவனித்து வருகிறேன். அக்கோவிலில் நேற்று காலை, தேரோட்டம் நடந்ததால், அங்கு சென்று இருந்தேன். உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள மூன்று திவ்யதேச சன்னிதிகள் மூடப்பட்டு இருந்தது விசாரிக்கப்படும். மூடப்பட்டிருந்த சன்னிதிகள் முறையாக திறக்க நடவவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.