/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை?
/
ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் சேவை?
ADDED : நவ 20, 2025 04:22 AM
சென்னை: பொங்கலுக்காவது, சென்னை - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - மைசூர், கோவை, எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நெரிசல் அதிகமாக உள்ள எழும்பூர் - ராமேஸ்வரம் தடத்திலும், வந்தே பாரத் ரயில் இயக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இன்னும் பயன் பாட்டிற்கு வரவில்லை.
வரும் பொங்கல் பண்டி கைக்கான முன்பதிவு, அனைத்து விரைவு ரயில்களி லும் முடிந்து விட்டது.
எனவே, பயணியர் பயன்பெறும் வகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு, சென்னை - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவை துவங்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

