/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு
/
ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு
ADDED : ஜன 30, 2024 04:10 AM

படப்பை, : ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கூடத்தின் கழிவுகள் கலப்பதால் ஏரிநீர் மாசடைந்து வருகிறது.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சி, ஆதனஞ்சேரி கிராமத்தில் ஏரி உள்ளது.
படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி அப்பகுதியில் 200 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், படப்பை ஊராட்சியின் கழிவுநீர் கால்வாய் மூலம் ஆதனஞ்சேரி ஏரியில் கலந்து வருகிறது.
மேலும், ஆதனஞ்சேரி ஏரியின் மேல்புறம் ஆரம்பாக்கம் சாலையில் உள்ள சமையல்கூட கழிவுகள் கால்வய் மூலம் ஆதனஞ்சேரி ஏரியில் வெளியேற்றப்படுகிறது.
இதனால், ஏரிநீர் மாசடைந்து வருகிறது. கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.