/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் கல் குவாரிக்கு செல்ல ஏரி நீர்வரத்து கால்வாய் துார்ப்பு
/
தனியார் கல் குவாரிக்கு செல்ல ஏரி நீர்வரத்து கால்வாய் துார்ப்பு
தனியார் கல் குவாரிக்கு செல்ல ஏரி நீர்வரத்து கால்வாய் துார்ப்பு
தனியார் கல் குவாரிக்கு செல்ல ஏரி நீர்வரத்து கால்வாய் துார்ப்பு
ADDED : ஆக 18, 2025 01:40 AM

சிறுதாமூர்:சிறுதாமூர் ஏரி நீர்வரத்து கால்வாய் துார்த்து, தனியார் கல் குவாரி க்கு செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் கிராமத்தில், 120 ஏக்கரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான ஏரி உள்ளது.
மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரை கொண்டு அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
சிறுதாமூர் ஏரிக்கு அப்பகுதி மலை குன்றில் இருந்து ஓடை வழியாக வந்தடையும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
பருவ மழைக்காலத்தின் போது இந்த மலை ஓடையில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் ஏரி நிரம்ப முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இதனிடையே, அப்பகுதி ஏரிக்கு அருகாமையிலான விவசாய நிலங்களை தனியார் நிறுவனம் விலைக்கு பெற்று, இரண்டு ஆண்டுகளாக தனியார் கல் குவாரி இயங்குகிறது.
இக்குவாரிக்கு வாகனங்கள் சென்றுவர ஏதுவாக பாதை ஏற்படுத்த பல இடங்களில் ஏரி நீர்வரத்து கால்வாய் துார்க்கப்பட்டுள்ளது.
இதனால், ஏரிக்கு மலை ஓடை தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் உள்ளதால் மழைக்காலத்தில் ஏரி நிரம்புவது கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, வரும் பருவ மழைக்காலத்திற்குள் சிறுதாமூர் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி முழுமையாக நிரம்ப சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.