/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'தினமலர்' செய்தி எதிரொலி :சாய்ந்த மின் கம்பம் அகற்றம் புதிதாக மாற்றி அமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி :சாய்ந்த மின் கம்பம் அகற்றம் புதிதாக மாற்றி அமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி :சாய்ந்த மின் கம்பம் அகற்றம் புதிதாக மாற்றி அமைப்பு
ADDED : ஏப் 03, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கோவிந்தவாடி ஊராட்சி துவக்கப் பள்ளி கட்டடம் அருகே, சாய்ந்திருந்த மின் கம்பத்தை மின் வாரிய அதிகாரிகள் நேற்று அகற்றி, புதிதாக மாற்றி அமைத்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டடம் அருகே, தெரு விளக்குகள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் மின் கம்பியுடன்கூடிய மின் கம்பம் சாய்ந்திருந்தது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மின் வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பத்தை புதிதாக நேற்று மாற்றி அமைத்தனர்.
