/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
/
சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
சுகாதார நிலையத்தில் பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
ADDED : ஆக 27, 2025 02:35 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில், பூட்டிக் கிடக்கும், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில், நகர்ப்புற சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கர்ப்பிணியர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் தினமும் வந்து செல்கின்றனர்.
சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வரும் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனித்தனியான கழிப்பறைகள் உள்ளன.
இந்நிலையில், சமீப நாட்களாக மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை எப்போதும் பூட்டியே உள்ளது.
இதனால், சுகாதார நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, கழிப் பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் கூறுகையில், ''உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பூட்டியே இருப்பதாக புகார் வந்துள்ளது. இதை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.