/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு
/
மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு
ADDED : ஆக 28, 2025 01:53 AM

வாலாஜாபாத்,:திம்மராஜம்பேட்டை சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியில் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் திம்மராஜம்பேட்டை உள்ளது. இப்பகுதியில், சமீபத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சாலையையொட்டி உள்ள அப்பகுதி ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பகுதியில் வழிவிடுவதற்காக சிறிது துாரம் கால்வாய் அமைக்காமல் விடுபட்டது. அதை தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் இதுவரை பணி மேற்கொள்ளாமல் உள்ளது.
கால்வாய் பணி முழுமை பெறாததால், ஊராட்சி அலுவலகத்திற்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல இயலாமல் சாலையோரத்தில் நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இப்பகுதி ஊராட்சி அலுவலகத்திற்கு வாகனங்கள் சென்றுவரும் வகையில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மழைநீர் வடிகால்வாய் பணியின் போது சில இடங்களில் வழி தேவைக்காக இடம் விடப்பட்டது. அவ்வாறு விடுபட்ட இடங்கள் குறித்து கணக்கில் உள்ளதால் அடுத்தடுத்து அப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.