/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிவன்படை தெருவில் சாலை அமைக்க குவிக்கப்பட்டுள்ள பொருட்களால் இடையூறு
/
சிவன்படை தெருவில் சாலை அமைக்க குவிக்கப்பட்டுள்ள பொருட்களால் இடையூறு
சிவன்படை தெருவில் சாலை அமைக்க குவிக்கப்பட்டுள்ள பொருட்களால் இடையூறு
சிவன்படை தெருவில் சாலை அமைக்க குவிக்கப்பட்டுள்ள பொருட்களால் இடையூறு
ADDED : நவ 06, 2025 02:03 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத், சிவன்படை தெருவில் சாலை அமைக்க குவிக்கப் பட்டுள்ள கட்டுமானப் பொருட்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற் பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டில் பஜார் சந்து அடுத்து சிவன்படை தெரு உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தோர் சிவன்படை வீதி வழியை பயன்படுத்தி வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சிவன்படை தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான கட்டுமானப் பொருட்களை தெருவின் நடுவில் கொட்டி வைத்துள்ளனர்.கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் இதுவரை பணிகள் துவங்காமல் உள்ளன.
இதனால், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலைக்கு செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழி இல்லாமல் மாற்று வழிகளில் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
எனவே, சிவன்படை தெருவில் உடனடியாக சாலை பணி மேற்கொள்ள வேண்டும். அல்லது சாலை நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக கொட்டி வைத்துள்ள கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

