/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டுமான பணிகள் நிறுத்த நோட்டீஸ் வினியோகம்
/
கட்டுமான பணிகள் நிறுத்த நோட்டீஸ் வினியோகம்
ADDED : செப் 20, 2024 08:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் உள்ளன.
இக்கோவிலுக்கு சொந்தமான கடைகளை கருக்குப்பேட்டை, நாயக்கன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிலர், அடிமனை குத்தகைக்கு வைத்துள்ளனர்.
இதில், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட சாலை விரிவாக்க பணிக்கு, சில கடைகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள நிலம் குத்தகைதாரர்களிடம் இருந்தது.
இந்த நிலத்தில், அறநிலையத்துறையினரிடம் அனுமதி பெறாமல், இரண்டு மாடி கட்டடங்களை கட்டி வருகின்றனர். அனுமதின்றி கட்டப்படும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என, செயல் அலுவலர் கதிரவன் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பினார்.