/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்
/
பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்
ADDED : ஜூலை 06, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:சாலவாக்கத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், 73 பயனாளிகளுக்கு காய்கறி, பழ, விதைத்தொகுப்பு வழங்கப்பட்டது.
சாலவாக்கம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா தலைமை வகித்தார்.
உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பயனாளிகளுக்கு காய்கறி, பழச்செடி விதைத்தொகுப்புகளை வழங்கினார்.