/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வட்டார அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
/
வட்டார அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
ADDED : செப் 25, 2024 04:11 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில், தாமல் கிராமத்தில் நேற்று முன்தினம் வட்டார பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. தாமல் ஊராட்சி தலைவர் சண்முகம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில், 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில், திருப்புட்குழி ராஜிவ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசும், தாமல் யூத் ஸ்போர்ட் கிளப் அணி இரண்டாம் பரிசும் பெற்றன.
இதில், 15 வயது சிறுமியருக்கான போட்டியில், திருப்புட்குழி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசும், கீழம்பி பால் பேட்மின்டன் கிளப் அணி இரண்டாம் பரிசும் பெற்றன.
மூத்தோர் பிரிவு ஆடவருக்கான பூப்பந்தாட்ட போட்டியில், காஞ்சி பிரண்ட்ஸ் பால் பேட்மின்டன் கிளப் அணி முதல் பரிசும், நாயகன்பேட்டை யூனியன் பால் பேட்மின்டன் அணி இரண்டாம் பரிசும் பெற்றன.
போட்டிக்கான ஏற்பாட்டை தாமல் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் மோகன்ராஜ், செயலர் மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.